உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

டிஜிட்டல் பொருளாதார மாற்றம்; இந்தியாவுடன் கைகோர்ப்போம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கையின் பொருளாதார மாற்றம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ZEE Media WION உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்தியாவை ஒரு போட்டியாளராகப் பார்க்காமல், இலங்கையின் முக்கிய பங்காளியாகக் கருதிச் செயல்பட வேண்டும்.

2030 மற்றும் 2035 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். இதற்குச் சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு அவசியம்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொடுக்க இலங்கை தனது ஆதரவை வழங்கும்.” – என்றார்.

இந்தியாவின் UPI கட்டமைப்பை இலங்கையின் QR முறைமையுடன் ஒருங்கிணைப்பது மற்றும் திருகோணமலையை பிராந்திய வலுசக்தி மையமாக மேம்படுத்துவது குறித்து அவர் விளக்கமளித்தார்.

இலங்கையை இந்தியாவின் உற்பத்தி ஆற்றலுக்குத் துணைசெய்யும் கேந்திர நிலையமாக மாற்ற வேண்டும் எனவும், “Made in Sri Lanka” எனும் நாமத்தை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் அடுத்த கட்ட முன்னேற்றத்தில் பங்கேற்குமாறு உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நாட்டுக்குப் பெறுமானம் சேர்க்கும் இத்தகைய கொள்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0