உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஐந்து பெரும் துயரங்களால் நாடு பாரதூரமான ஆபத்தில்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான ஐந்து துயரச் சம்பவங்களால் இலங்கை தற்போது மிகவும் பாரதூரமான மற்றும் அபாயகரமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கலாநிதி சந்திமா விஜய குணவர்தனவால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், அரசியல் இறையாண்மை மற்றும் மக்களின் வாழ்க்கை முறை என அனைத்தும் இன்று பெரும் ஆபத்தில் உள்ளன.

வழக்கமான கோட்பாடுகளுக்குள் முடங்கிக் கிடக்காமல், நிலவும் சவால்களுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகளைத் தேட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையின் கடலோரங்களில் காணப்படும் எரிவாயு மற்றும் எரிபொருள் வளங்களைப் பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாகப் பெற முடியாத நிலை நீடிக்கின்றது.

வெளிநாடுகளைச் சார்ந்திராமல், சொந்த முயற்சியால் நாட்டின் வளங்களைப் பயன்படுத்தித் தன்னிறைவை அடைய வேண்டும்.

உள்நாட்டு காய்கறிகள், பழங்கள் மற்றும் விளைபொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறைகளை நோக்கி நகர வேண்டும்.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை வேண்டுமென்றே சீரழித்து, நாட்டுக்குப் பொருந்தாத ஏகாதிபத்தியக் கருத்துகளை நிலைநிறுத்தச் சில குழுக்கள் சூழ்ச்சி செய்து வருகின்றன.

இத்தகைய தீவிர வலதுசாரி மற்றும் நவ தாராளவாதக் கருத்துகளுக்கு அடிமையாகாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், நாட்டின் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தேவையான பதில்களைத் தந்துள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0