உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பழுதடைந்த நிலையிலும் உரிய வெப்பநிலை கையாளப்படாத சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இவை உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஜோக்கெட், மற்றும் குடிபான போத்தல்கள் என தெரிய வந்த நிலையில், பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் த.கஜனன் அவர்களினால் கைப்பற்றப்பட்டதுடன், விற்பனைக்காக கொண்டுவந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த விற்பனையாளரிடமிருந்து 448 நியூடெல் ஜோக்கெட்களும் 143 குடிபான பால் போத்தல்களும் கைப்பற்றப்படன. இவை அனைத்தும் உணவுகளை கையாளும் உணவகங்களுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டவையாகும் .

இதனைத் தொடர்ந்து மேற்படி பொருட்களை பொதுச் சுகாதார பரிசோதகரினால் கைப்பற்றியதுடன் உடன் அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துடன் மேற்படி முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0