உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்தப் பேரணியில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் தனது நோக்கத்தில் இருந்து தவறாது. ஜனாதிபதி அநுர மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று இலங்கைக் கிரிக்கெட் சபை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜபக்சாக்களின் மிக நெருங்கிய சகாவான சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். ஊழல் மோசடிக்கு எதிராக ரணில் மீதும் நட வடிக்கை எடுக்கப்பட்டது. இதையெல்லாம் எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் செய்தோம். ஊழல் வாதிகளையும், மோசடியாளர்களையும் தண்டித்தோம்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் தெற்கில் இடம்பெறுவதைப்போன்று வடக்கில் ஏன் இடம்பெறுவதில்லை? என்று எம்மிடம் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களின் கேள்வி நியாயமானது. கவலைப்பட வேண்டாம். தெற்கில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அவ்வாறே, வடக்கிலுள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள். வடமாகாணத்தில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்கிறோம். அவற்றை நாங்கள் சடுதியாகத் தீர்த்துவைக்க முற்பட்டால், வங்குரோத்து அடைந்துள்ள அரசியல்வாதிகள் மேலெழும்ப எத்தனிப்பார்கள்.

எனவே, நிதானமான முறையிலேயே இந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டும். மோசடியாளர்களும், சமூக விரோதிகளும் சிறைக்குச் செல்லும் காலமாக அடுத்த இரண்டு வருடங்கள் அமையும். எனவே நம்பிக்கையுடன் இருக்குமாறு மக்களைக் கோருகின்றோம் – என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0