உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று 2 ஆம் திகதி மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த பிக்குகள் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்தபோது, 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமிதானந்த என்ற பிக்கு ஒருவரே இந்த சட்டவிரோத செயலை ஒழுங்குப்படுத்தியுள்ளமை தெரியவந்தது.

இதற்கமைய, கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார். அவர் நாளை 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பிக்குவின் வழிகாட்டலில் இதற்கு முன்னரும் போதைப்பொருட்கள் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது உதவியாளர் ஒருவரும் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த பின்னரே இன்று இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0