வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு.!
வங்கி அமைப்பின் மூலம் அரசுத் துறைக்கு வழங்கப்படும் கடன் அளவு எதிர்காலத்தில் குறையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதுமத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில், அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் அரச நிதி ஒருங்கிணைப்பு செயன்முறைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம் இந்த நிலை உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி நேரடி நிதியுதவி வழங்காத சூழலில், வெளிநாட்டு நிதி ஆதாரங்களுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் காரணமாக அரசாங்கம் உள்நாட்டு மாற்று நிதி ஆதாரங்களை நாட வேண்டியிருக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்காக போதுமான நிதி இருப்புகளைப் பராமரிப்பது அவசியம் என்றும், அரசாங்கத்தின் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற இதுவே முக்கிய காரணமாக இருக்கும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.