உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி மார்ச் மாதத்தில் இலங்கையில் 195 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு இடம்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் மொத்தமாக 613 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 900 சதவீதம் அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இறக்குமதி படிப்படியாக அதிகரித்தது.

இதன் விளைவாக, கடந்த ஆண்டின் இறுதியில் மொத்த வாகன இறக்குமதி செலவினம் 2.047 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.இதேவேளை, கடந்த ஆண்டு முதல்காலாண்டில் வாகன இறக்குமதி செலவினம் வெறும் 61 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0