சங்குக் கூட்டணியின் மே தின நிகழ்வு இணுவிலில்!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், “ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” என்ற தலைப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்குக் கூட்டணி) மே தினக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., சமத்துவக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப. கஜதீபன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வேந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.அத்துடன் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.