உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கைதிக்கு போதைப்பொருட்களை வழங்க முயன்ற தாயும், மகளும் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு, பிஸ்கட்களுக்குள் மறைத்து வைத்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வழங்க முயன்ற தாயும் மகளும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலாத்துஓயா, உனுவின்ன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தாயும் 19 வயதுடைய மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை (30) இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக போகாம்பறை சிறைச்சாலை அத்தியட்சகர் சம்பத் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

பல்லேகலை சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியைப் பார்ப்பதற்காக வருகைத்தந்திருந்த இரு பெண்கள், கைதிக்கு வழங்குவதற்காக சாக்லேட் கிரீம் பிஸ்கட்களைக் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பிஸ்கட்களைச் சோதனை செய்த போது, பிஸ்கட்களுக்கு இடையில் போதைப்பொருட்கள் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்களிடமிருந்து 680 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 3140 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் பார்வையாளர் அறையிலேயே வைத்து இவ்விரு சந்தேகநபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இருவரும் பல்லேகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0