உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து சமஷ்டியை உருவாக்கு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய உழைப்பாளிகள் தினப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதாரம் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரகடனத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:-

பொருளாதாரக் கோரிக்கைகள்
சம்பள உயர்வு: பொருளாதாரச் சிக்கல், ‘டித்வா’ புயல் மற்றும் மேற்காசிய போர்ச் சூழலால் வீழ்ச்சியடைந்துள்ள ரூபாவின் பெறுமதியைக் கருத்திற்கொண்டு, நாளாந்தச் சம்பளம் பெறுவோரின் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

சுயதொழிலாளர் நிவாரணம்: உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் சுயதொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

மின்சாரக் கட்டணம்: நிலக்கரி இறக்குமதி ஊழலால் ஏற்படும் மின்சாரக் கட்டண உயர்வை மக்களிடம் வசூலிக்காமல், அதற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே அந்தப் பணத்தைப் பெற வேண்டும்.

அரசியல், உரிமைசார் கோரிக்கைகள்
அரசியல் தீர்வு: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பிலான புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தேர்தல்: நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும்.

கைதிகள் விடுதலை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதுடன், எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிப் பொறிமுறை உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

நில விடுவிப்பு: வடக்கு, கிழக்கில் இராணுவம் மற்றும் தொல்பொருள், வனப்பாதுகாப்பு, மகாவலி ஆகிய திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

மேலும், புதிய அரசிலும் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு பொதுச்சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது பிரகடனத்தில் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0