உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படும் மலசலகூடம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
46 பார்வைகள்

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள தவலந்தன்னை நகர பொது மலசலகூடம், முறையான பராமரிப்பின்றிப் பாவனைக்கு உதவாத நிலையில் சீரழிந்து வருவது அப்பகுதி மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இறம்பொடை வட்டார பிரதேச சபை உறுப்பினர் என்ற ரீதியில் இந்த மலசலக் கூட திருத்தம் தொடர்பாக பல தடவைகள் பிரதேச சபை தலைவரிடம் முறைப்பாடு செய்தும் இதுவரையில் இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

மேலும் கடந்த 2025 ஆம் ஆண்டு பிரதேச சபையினால் இம் மலசலகூடம் டெண்டர் விடப்பட்டு குறித்த தரப்பினருக்கு வழங்கப்பட்ட நிலையில் அத்தரப்பினர் இம் மலசலகூடத்தை சரிவர நடாத்துவதற்கு பிரதேச சபை தலைவருக்கு இதனை திருத்தித் தருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இன்று வரை இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள இப் பொதுக் கழிப்பறையானது பாவனைக்கு ஏற்புடையதாக இல்லாத நிலையில் போக்குவரத்து பயனாளிகளுக்கும், ஊர் மக்களுக்கும், சுற்றுலாப் பிரயாணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதுடன் இவ்வாறு அரச சொத்துக்கள் கைவிடப்படும் நிலையானது கேள்விக்குறியாகியுள்ளது.

பிரதான சுற்றுலாத்தள நுழைவாயிலாக கருதப்படும் இறம்பொடை மண்ணானது எந்தவித அபிவிருத்திகளுக்கும் உள்வாங்கப்படாமல் அரசினால் ஒதுக்கப்பட்ட நிலையானது கொத்மலை பிரதேசவாசிகளினால் மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாக கருதப்படுகிறது.

கொத்மலையினை கொத்மலை கிழக்கு, மேற்கு என பேதப்படுத்தி சேவை வழங்காமல் முழுக் கொத்மலைக்கும் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உள்வாங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0