டயகம பேருந்து விபத்து; சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழப்பு.!
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 34 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர்கள் அனைவரும் நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்கரபத்தனை வேவல்லி தோட்ட வைத்தியர் எஸ்.சிவபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த 66 வயது உடைய பி.லூக்ஸ் என்பவர் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பேருந்து விபத்தில் தற்போது இருவர் உயிரிழந்துள்ளனர் என ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.