உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு கொட்டகலை CLF வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து மலர்தூவி மௌனஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையேற்று, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வுகள் பிரதேச வாரியாக நடாத்தப்பட்டது .

தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்நிகழ்வில் இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர் அனுசியா சிவராஜா, பிரதி தவிசாளர் பெ. ராஜதுரை, போசகர் பொ.சிவராஜா, உப தலைவர் சச்சிதானந்தன், உதவி தேசிய அமைப்பாளர் ராஜமணி பிரசாந்த், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தோட்டத் தலைவர்கள், தலைவிகள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு தொழிலாளர் ஒற்றுமையையும், அவர்களின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்பையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0