உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

புதுமடம் கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி பொருட்கள் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளது.

பூச்சி மருந்து, ஷாம்பு, காபி தூள், ஃபேஸ் க்ரீம், சோப்பு4 உள்ளிட்ட பொருட்களை மீட்ட எஸ் பி தனிப்பிரிவு பொலிஸார் பொருட்களை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் கடல் வழியாக படகில் கடத்தல் பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தமையினால் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததால் கடத்தல் சம்பவங்கள் குறைந்து இருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கட்டதால் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் உச்சப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி சாலையில் உள்ள வீடு ஒன்றில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமேஸ்வரம் உட்கோட்ட எஸ் பி தனிப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆளில்லாத அந்த வீட்டை சுற்றி வளைத்த தனிப்பிரிவு பொலிஸார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு 28 மூட்டைகளில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மூட்டைகளை திறந்து பார்த்த போது 19 மூட்டைகளில் பூச்சி கொல்லி மருந்து, இரண்டு மூட்டைகளில் சோப்பு, ஐந்து மூட்டைகளில் ஃபேஸ் க்ரீம், ஒரு மூட்டையில் ஷாம்பு, ஒரு மூட்டையில் காபித்தூள் என மொத்தமாக 13 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த தனி பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக அதை கீழக்கரை சுங்கதுறை கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் ஒப்படைத்த பின் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் ரூ.13 இலட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் புதுமடம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சிலரின் உடலங்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன?

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள…

63 0 0
இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

82 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

50 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

96 0 0