உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தேசிய நிதிப் பாதுகாப்பு ஆபத்தில்! – 25 இலட்சம் டொலர் மோசடி குறித்து சஜித் காட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கையின் வெளிநாட்டுத் தவணைக் கட்டணமான 25 இலட்சம் அமெரிக்க டொலர் சைபர் திருட்டுக்கு உள்ளாகியுள்ளமை நாட்டின் தேசிய நிதிப் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட பாரதூரமான அச்சுறுத்தல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“25 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் தவணையை நாடும் மக்களும் இழந்துள்ளனர். இதனால் உரிய தரப்புக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்தப்படாமலே காணப்படுகின்றது.

இந்த மோசடி காரணமாக சர்வதேச நிதி தரவரிசை மற்றும் ஏனைய பரிவர்த்தனைகளுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அரசு நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

கொடுப்பனவு செலுத்தப்படாமையால் ஏற்பட்ட இறையாண்மை கடன் தவறல் சர்வதேச மட்டத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இந்த நிதித் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கண்டறிய அரசு வெளிப்படையான மற்றும் பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், ஜனாதிபதி தலைமையிலான அரசு ஒரு தேசிய சைபர் பாதுகாப்புக் கட்டமைப்பை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும்.

இந்த மோசடி தொடர்பாக விசாரித்து நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய, எதிர்க்கட்சி தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.

இந்த நிதி நிர்வாகத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் தவறுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0