உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பருத்தித்துறை நகர சபை அமர்வு..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

பருத்தித்துறை நகர சபை அமர்வு தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதலாவதாக கடந்த கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சபைக்கு அறிவிக்கபட்டு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

தொடர்ந்து சபை  உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட நகர சபை எல்லைக்குட்பட்ட  கழிவுநீர் வாய்க்கால்களுக்குள் கழிவு  நீரை மட்டும் அகற்றுவது என்றும், ஏனைய  கழிவு பொருட்களை வெளியேற்றுவோருக்கு தடை விதிப்பதும், எதிராக உரிய நடவடிக்கை எடுப்பது என்றும், 

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும்,  மரக்கறிச் சந்தை துவிச்சக்கர வண்டி குத்தகை  தொடர்பாகவும், 

நகர் பகுதியில் கமரா கண்காணிப்புக்காக கேமரா கொள்வனவு  தொடர்பாகவும்,  திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளுக்கான பருத்துத்துறை பிரதேச சபையுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்தல் தொடர்பாகவும்,  பொதுவான அவசரமான பராமரிப்பு வேலைகளுக்காக பெறுகை நடைமுறைகளை பின்பற்றுவதால்  சிரமத்தையும்,  கால தாமதம்  ஏற்படுவதனால்  வேலைகளை விரிவுபடுத்தி மேற்கொள்வதற்கு ஏதுவாக தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை நாட்கூலி அடிப்படையில் பெற்று பயன்படுத்துவது தொடர்பாகவும்,

பிரஜா  சக்தி திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி சபையால் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பாகவும்,  நகர சபைக்கு உட்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கட்டிட அனுமதி தொடர்பாகவும்,  நகர சபை எல்லைக்கு  உட்பட்ட கோரியடி கடற்கரையில் நடமாடும் இரு கடைகள் அமைப்பது  தொடர்பாகவும் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் ,

நவீன சந்தை தொகுதியில் வாடகை ஒப்பந்த பெயர் மாற்றத்திற்கான சபை அனுமதியும்,  பிரதேச செயலார்  பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு  இலவச நீர் இணைப்பு வழங்குவதற்கு அமைச்சினார் அனுமதி வழங்கப்பட்டுள்ள 160 இலவசமாக அனுமதியை அங்கீகரித்தலும், 

2021,  2022 ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட முத்திரை தீர்வு நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கான சபை அனுமதியும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பன்னங்கண்டி வீதியும்,  இரண்டாவதாக கண்ணை அம்மன் கோவில் வீதியும் உள்மையால்  அதற்கான தழுவல் அனுமதி  உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை தேசிய கணக்கு ஆய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட  நிறுவனத்தி கபல லட்சம் ரூபாய் நிதி கையாளிடம் பல மில்லியன் ரூபாய் நிதி கையாள்கை  இடம் பெற்றுள்ளதாக கணக்கு ஆய்வு  திணைக்களத்தின்  அறிக்கையை தவிசாளர் சபைக்கு வாசித்தார் பிற்பகல் 11. 45 மணியளவில் நிறைவுற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0