உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இளைஞர்கள் அரசியலில் ஈடுபட ஊக்கமளியுங்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இளைஞர்களின் அரசியல் வகிபாகங்களை அதிகரிப்பதற்கு கட்சிகளில் உள்ள மூத்தவர்கள் ஊக்கமளிக்க வேண்டுமென இளைஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இளைஞர்களின் அரசியல் வகிபாகம் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு குறைவாக உள்ள நிலையில் அதனை ஊக்கப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளின் மூத்தோர்கள் செயல்பட வேண்டும்.

இளைஞர்கள் அரசியலில் ஈடுபட விருப்பமாக இருக்கின்ற நிலையிலும் கூட கட்சிகளில் உள்ள மூத்தவர்களின் சில நெருக்கடியான செயற்பாடுகள் காரணமாக அவர்களுக்கான வாய்ப்புகள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.

குறிப்பாக கூறப்போனால் அரசாங்கத்தினால் இளைஞர்களுக்காக உள்ளூராட்சி மன்றங்களில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு காரணமாகவே கட்சிகள் வேறு வழியின்றி இளைஞர்களை உள்ளீர்க்க வேண்டிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

மாறாக அரசியல் கட்சிகளாக இளைஞர்களை அரசியலில் ஈடுபட வைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது இளைஞர்களும் ஆர்வத்துடன் அரசியலில் பங்கெடுக்கும் சூழல் ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0