உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

“உருட்டு பிரட்டு திருட்டு” என்ற தொனிப்பொருளில் சஜித் அணியின் மே தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில், அக்கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மே தினக் கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

  • இடம்: பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானம், மாளிகாவத்தை, கொழும்பு.
  • நேரம்: நாளை (மே 01) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பம்.

விசேட அம்சம்: இந்த முறை மே தின நிகழ்வுகளில் பேரணிகள் எவையும் இடம்பெறாது, பொதுக் கூட்டம் மாத்திரம் நடைபெறும்.

தொனிப்பொருள்: “உருட்டு பிரட்டு திருட்டு” எனும் விசேட தொனிப்பொருளில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மே தினக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்துள்ள பல தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன. அத்துடன், பொதுமக்களின் நலன் கருதி இந்நிகழ்வு சஜித் பிரேமதாஸவின் உத்தியோகபூர்வ முகநூல், வலையொளி மற்றும் ஏனைய சமூக ஊடகத் தளங்கள் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி இந்த மாபெரும் மே தினக் கூட்டம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0