உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இன்று 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் நீதி கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் வெளிநோயாளர் பிரிவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 28 ஆம் திகதி முதல் குறித்த வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை நோயாளர்கள் பார்வை இடும் நேரம் முடிந்த பின்னர் ஒருவர் வைத்தியசாலையில் உள்ள சிகிச்சை அறையில் வைத்து சண்டை இட்டு கொண்டிருந்த வேளை வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் நோயாளிகளை பார்க்கும் நேரம் முடிந்த நிலையில் வைத்தியசாலையில் தகாத முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து அந்த பெண் ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்டுள்ளமை குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்த போதிலும் இதுவரை சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கைது செய்யாத காரணத்தால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளபடுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0