கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் நேற்று (29.04.2026) மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் ஆவார்.
குறித்த நபர் காலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத நிலையில், உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது, வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.