உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் – இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் இடையே சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் ஜேவியர் அசார் ஆகியோருக்கு இடையில் நேற்று புதன்கிழமை (29) விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்,
இலங்கை மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துதல், பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இரு நாடுகளும் பயன்பெறக்கூடிய வகையில் தொடர்ச்சியான ஈடுபாடுகளை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர நலன்களுக்காகவும், உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0