உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று 29 ஆம் திகதி நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா   தலைமையிலும்இ நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் ஒருங்கிணைப்பிலும் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதில்  பிரதேச மக்களின் அடிப்படை தேவைகள்இ உட்கட்டமைப்பு அபிவிருத்திஇ கல்வி மேம்பாடு மற்றும் வெள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு முக்கிய முன்மொழிவுகள்  முன்வைக்கப்பட்டன.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்பட்டதுடன்  அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 நாவிதன்வெளி பிரதேச மக்களின் காதி நீதிமன்றத் தேவைகளுக்காக தற்போது சம்மாந்துறை பிரதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. இதற்கான தீர்வாக நாவிதன்வெளிக்கு தனியான காதி நீதிமன்றம் அமைத்தல் அல்லது சம்மாந்துறை காதி நீதிபதி வாரத்தில் குறைந்தது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நாவிதன்வெளியில் சேவையாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்,

சாளம்பைக்கேணி கமு/சது/அஸ்-சிராஜ் மஹா வித்தியாலயத்திற்கு வகுப்பறைகள் மற்றும் கேட்போர் கூடம் வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடம் அமைத்தல்,நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு வீதிகளை புனரமைத்தல் மற்றும் காங்கிரீட் அமைத்தல், சாளம்பைக்கேணி 03, 04 பகுதிகளில் அமைந்துள்ள ஆ.26 சனல் வீதிக்கு காங்கிரீட் அமைத்தல்,சாளம்பைக்கேணி 01 பகுதியில் உள்ள பவாஷா வீதி வீரத்திடல் வீதிக்கு காங்கிரீட் அமைத்தல்,சாளம்பைக்கேணி 04 பகுதியில் உள்ள அஷ்ரப் வீதிக்கு காங்கிரீட் அமைத்தல், சாளம்பைக்கேணி 03 பகுதியில் உள்ள ஹாஜியார் வீதிக்கு காங்கிரீட் அமைத்தல்,சாளம்பைக்கேணி 04 பகுதியில் உள்ள ஹிஜ்ரா இரண்டாம் குறுக்குத் தெரு வீதிக்கு காங்கிரீட் அமைத்தல், சாளம்பைக்கேணி 04ஆம் பிரிவின் 12ஆம் கொலனியில் பல்தேவைக் கட்டிடம் அமைத்தல்.

பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் தேவைகளை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட இம்முன்மொழிவுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பிரதேச மக்களின் வாழ்வாதாரத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், எம்.ஏ.எம்.தாஹிர்,  பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிலுள்ள பிரஜாசக்தி உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மகளிர் அபவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,  திணைக்களத் தலைவர்ககள், உயர் அதிகாரிககள், கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0