உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஒற்றுமை முயற்சியை பலப்படுத்தும் ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயக் குழு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணய பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு குறித்த ஆவணத்தைத் தயாரிப்பதற்காக 28 பேர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட விசனம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் கூறுகையில்,
“தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து, புதிய அரசமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு ஆவணத்தைத் தயாரிப்பது பற்றி ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

இந்த முயற்சியில் ஆரம்பத்திலிருந்தே பங்கெடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அந்தத் தொடர் கலந்துரையாடல்களின் முடிவிலேயே தற்போது 28 பேர் அடங்கிய வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியிலிருந்து நாம் ஒருபோதும் விலகப்போவதில்லை.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சிகளைப் புதிய குழுவின் செயற்பாடு பாதிக்காது.” – என்று அவர் வலியுறுத்தினார்.

சட்டத்தரணிகள் பேரவையின் ஆவணத் தயாரிப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் இந்தக் கூட்டு முயற்சியில் பங்களிக்க விரும்பினால், அவர்களுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என்றும் அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

இனப்பிரச்சினைக்கான தமிழர் தரப்பின் கூட்டு நிலைப்பாட்டைத் தயாரிப்பதில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

59 0 0