உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மே தினத்தில் புதிய வரலாறு படைக்கத் தயாராகும் என்.பி.பி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

“சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது” என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது குறித்து ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பில் மாத்திரம் பிரதான கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, மக்களின் நலன் கருதி மாவட்ட ரீதியாகப் பேரணிகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து நுவரெலியாவில் நடைபெறும் விசேட மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார். இக்கூட்டத்தில் பதுளை மாவட்ட மக்களும் பங்கேற்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மக்களும், வன்னியை மையப்படுத்தி வவுனியாவில் நடைபெறும் கூட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையின் மே தின வரலாற்றில் அரசியல் கட்சியொன்று ஒரே நாளில் 21 மாவட்டங்களில் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்துவது இதுவே முதன்முறையாகும், இம்முறை பெருந்திரளான மக்கள் அணிதிரள்வார்கள்.” – என்றும் ரில்வின் சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0