உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டே அநுரவும் ஆட்சி செய்கின்றார்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டே மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் ஆட்சி செய்கின்றன. அதைத்தான் அநுரவும் செய்கிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சோரன்பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் தினம் ஒவ்வொரு செய்தியை கேள்விப்பட்டு கொண்டிருக்கின்றோம்.

அரசாங்கம் நிலக்கரியை கொள்வனவு செய்தது அதன் எரிபற்று நிலை 20 வீதமே இருந்தது. மிகுதி சாம்பலாக போய்விட்டது. இதனால் என்ஜின்கள் பழுதடைந்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நட்டம். மக்களிடமே அந்த நிதியை அறவிடுவார்கள். இது அரசாங்கம் விட்ட பாரியதொரு தவறு.

25 மில்லியன் டொலரை மத்திய வங்கியில் காணவில்லை. அதுவும் 15 வரையான உயர்மட்ட அதிகாரிகள் கையெழுத்து வைத்தே அந்த நிதி எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு எனில் இலங்கை எப்படி முன்னேறுவது, உருப்படுவது. இலங்கை மட்டுமல்ல ஆசிய நாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது ஊழல். பெருச்சாளி ஊழல்களிலிருந்து மாற முடியாது. அவர்கள் இதிலிருந்து விடுபடமாட்டார்கள். இவ்வளவு காலமும் பிக்குமார் சுதந்திரத்தை கொடுக்கவில்லை, பேரினாவாத சிந்தனையை பரப்புகிறார்கள் என்று நேற்று காட்டுநாயக்கா விமான நிலையத்தில் 22 புத்த பிக்குமார் போதைவஸ்தை கொண்டு வத்திருக்கிறார்கள். அதன் பெறுமதி 110 கோடி, 110 கோடிக்கு வந்த போதைவஸ்து பொருட்கள் இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்பட்டால் ஒரு சந்ததியே அழிந்து விடும்.

எவ்வளவோ பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி மண்டை லூசு ஆகிறான். மூளை வெடித்து சாகிறான். பரந்தனில் அண்மையில் ஒரு இளைஞன் போதையால் மரணித்திருக்கின்றார்.

நல்லதை சொல்லி கொடுக்க கூடிய, நல்லதை செய்கின்ற இறைவனால் படைக்கப்பட்ட தூதர்கள் என்ன செய்கின்றர்கள் என்றால் போதைவஸ்தை கொண்டுவந்து கொடுத்து இனத்தை அழிப்பதில் கவனமாக இருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் மைத்திரியாக இருந்தாலும் மகிந்தவாக இருந்தாலும், ரணிலாக இருந்தாலும் சந்திரிக்காவாக இருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் பணம் உழைப்பதில் குறியாக உள்ளார்கள்.

இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டு தமிழர்களை ஏதோ ஒரு வகையில் அழிச்சு தள்ளி தாங்கள் இந்த நாட்டில் தங்களை அடையாளப்படுத்துவதில் கவனமாக உள்ளார்கள்.

இதைத்தான் அநுரவும் செய்தார். அநுர வரும்போது அவரெல்லோ ஆள், அவரால் முடியும் என்று எங்களிலும் கொஞ்சப்பேர் பேசினார்கள். நாங்கள் பொறுத்திருந்து தானே சொல்லலாம். அநுர வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன.

இன்று வலிகாமம் வடக்கில் கையை காட்டி நடக்கிறார். உங்களுக்கு காணி தர மாட்டன் என்றுதான் அவர் கை காட்டினார். எங்கள் ஆட்கள் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். அவர் நடக்கும் போது எங்களுக்கு கை காட்டினார் என்று. அவர் சொன்னது நான் காணி தர மாட்டன், பொத்திக்கொண்டு இருங்கோ என்று என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

59 0 0