உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மே தினத்தை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மே தினத்தை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவுபடுத்திய கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர்

எமது பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினருக்கும் பொதுச் சந்தையில் உள்ள தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல் எமது வர்த்த சங்க காரியாலத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் எதிர்வருகின்ற மே தின ஓய்வு சம்பந்தமாக தொழிலாளர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்க்கப்பட்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளரின் உத்தரவிற்கு அமைவாக எதிர்வரும் மே 1ம் திகதி (வெள்ளிக்கிழமை) எமது பொதுச்சந்தையை முற்று முழுதாக மூடி அத்தினத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பதாக தீர்மானம் எட்டப்பட்டது. இத் தீர்மானத்திற்கு அமைவாக அத்தினத்தில் எமது பொதுச் சந்தையின் வளர்ச்சிக்கும் அன்றாட இயங்குதலுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

அன்றைய தினம் தொழிலாளர்களின் ஓய்வினை உறுதிப்படுத்தும் பொருட்டு, சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் முழுமையாக இடைநிறுத்தப்படும்.

ஆகவே அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தங்களது தொழிலாளர்களுக்கு இந்த விடுமுறையினை வழங்கி, சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

“உழைப்பால் உயர்வோம், உழைப்பவரை மதிப்போம்.”

ஆகவே இத் தினத்தை சிறப்பிக்கும் முகமாக நாம் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி கடந்த வருடத்தில் சிறப்பித்தது போன்று இதனை சிறப்பிக்க உள்ளோம்.

ஆகவே அத்தினத்தில் எங்களோடு சேர்ந்து சிறப்பிக்க விருப்பமானவர்கள் தயவுசெய்து எமது வர்த்த சங்க காரியாலயத்தில் தங்களுடைய பெயரினையும் தொலைபேசி இலக்கத்தினையும் கொடுத்து வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதில் உறுதிப்படுத்தாத எவரும் தயவு செய்து அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் அந்த அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0