உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி; திறைசேரி செயலாளருக்கு கோப் குழு அவசர அழைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

திறைசேரி கணக்கிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு (கோப் குழு) அழைப்பு விடுத்துள்ளது.

இச்சம்பவம் குறித்த தீவிரத்தைக் கருத்திற்கொண்டு நாளை வியாழக்கிழமை திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எம்.பி. அறிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா,
“அதிகாரிகளை அழைப்பதற்கான தீர்மானம் குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

பொது நிதி மீதான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. நிலையியற் கட்டளைகளின்படி அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தும் அதிகாரம் கோப் குழுவுக்கு உண்டு.

இதனை ஒரு தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும். கட்சி சார்பான பார்வைகளால் இதற்குத் தீர்வு காண முடியாது. நிதி அமைச்சில் பாரிய சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” – என்றார்.

திறைசேரி அதிகாரிகளுடன் சேர்ந்து மத்திய வங்கி ஆளுநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.

“எந்த மோசடியும் நடக்கவில்லை” என நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறப்படும் கருத்துக்கள் குறித்து எச்சரித்த அவர், எதனையும் முன்கூட்டியே வகைப்படுத்த வேண்டாம் எனவும், பொறுப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

2.5 மில்லியன் டொலர் காணாமல்போனது தொடர்பாகத் தெளிவான விளக்கம் தேவை என்பதையே அவர் இதன்போது வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0