உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வாய்மொழி உத்தரவாதத்தை நம்பி காணிகளை அளக்கவிட முடியாது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அரச அதிகாரிகளின் வாய்மொழி மூலமான உத்தரவாதத்தை நம்பி எமது காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது என்று தையிட்டி காணி உரிமையாளர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

தையிட்டியில் நேற்று காணி அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
காணிகள் விடுவிப்பதற்கான முதற்கட்டமாகவே இந்த அளவீடு செய்யப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் எழுத்துமூல ஆவணத்தை நாம் கோரினோம்.

அதிகாரிகள் சில கையொப்பங்களுடன் ஒரு கடிதத்தை வழங்கினர். ஆனால், அதனை வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் தருமாறு நாம் கோரினோம். அதனை அவர்கள் வழங்க மறுத்ததாலேயே அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்தினோம்.

அதிகாரிகளின் வெறும் வாய்மொழி உத்தரவாதங்களை மட்டும் நம்பி நாம் எமது காணிகளை அளக்கவிட முடியாது. எமது காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல், வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற பலத்த அச்சம் எமக்கு உள்ளது. இதனைத் தவிர்க்கவே சட்டபூர்வமான ஆவணத்தை நாம் கோருகின்றோம்” என்று உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

“மக்களுடைய காணி மக்களுக்கே” என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் இந்த அரசு, எமது கோரிக்கையை நிறைவேற்றி உரிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0