உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் 20ஆவது அதிபராக ஏ.எம். நெளஷாத் கடமைகளை பொறுப்பேற்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் (தேசிய பாடசாலை) இருபதாவது புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்-I அதிகாரி ஏ.எம். நெளஷாத் இலங்கை கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டு வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்முனை சாஹிரா கல்லூரியில் இரண்டாம் நிலை கற்று, பின்னர் மத்திய முகாம் அஸ்-சிராஜ் வித்தியாலயத்தில்
கலை பிரிவில் (3A) சித்தி பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம் (MIT) இளமானி பட்டம் பெற்று கல்வி மற்றும் கல்வி முகாமைத்துவ பட்டப்பின் டிப்ளோமா (PGDEM, PGDE), கல்வி முதுமானி பட்டத்தையும் ( M.Ed) பெற்றுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார். தனது சேவைக்காலத்தில் சில ஆண்டுகள் சம்மாந்துறை கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர், மாவனெல்லை சாஹிரா கல்லூரி அதிபர், கல்முனை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபராக குறுகிய காலம் பணியாற்றினார். பின்னர் கிண்ணியா கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றிய நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வி அதிகாரி ஏ.எம். நெளஷாத் ஒரு சிறந்த அனுபவம் வாய்ந்த இளம் கல்வி அதிகாரி, உளவள வளவாளரும் ஆவார்.

தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அதிபர் ஏ.எம். நெளஷாத் அதிதிகளுக்கு முன் உரையாற்றும் போது தனது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தார்:

இலங்கையில் பல நீண்ட கால வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் பெண்கள் பாடசாலையான மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று அதிபராக பொறுப்பேற்றுள்ள நான், அமானிதமாக கொண்டு எனது கடமைகளை மிகச் சிறப்பாக செய்து எமது பிரதேசத்தில் மிகச் சிறப்பான ஒரு பாடசாலையாக வளர்ச்சி காண உழைப்பேன் என்றும் அத்துடன் மாணவிகளின் கல்வி வளர்ச்சியுடன் இணைந்த பண்பாடு, கலாசச்சாரம் மிக்க பெண் மாணவிகள் சமூகத்தை உருவாக்குவதில் அயராது பாடுபடுவதுடன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த கல்வி அதிகாரிகள், கல்லூரி சமூகத்திற்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, எமது பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்கம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு கைகோர்க்க முன்வருமாறு வேண்டுகோளை விடுத்தார்.

புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வானது கல்லூரி முன்றலில் பூ மாலை அணிவிக்கப்பட்டு கல்லூரி, தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன் பதவி ஏற்பு வைபவத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மூதூர், கிண்ணியா வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர், உதவிக் கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர், உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்கத்தின் செயலாளர், சங்க உறுப்பினர்கள், கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர், ஏனைய பாடசாலை அதிபர்கள், கல்லூரியின் பிரதி, உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவிகள் பெற்றோர்கள், புதிய அதிபரின் பெற்றோர்கள், மனைவியின் தந்தை, சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மஹ்மூத் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் றிசாத் ஷெரீப் அவர்களினால் பதவி பெயர்ப்பலகை அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் நிகழ்வின் விஷேட துஆ பிரார்த்தனையின் பின்னர் ஸ்மாட் மண்டபத்தில் பொதுக் ௯ட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஏலவே கல்லூரியின் அதிபராக சேவையாற்றிய இவர், கல்வி நிர்வாகத்தில் விரிவான அனுபவத்துடன் தற்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிரந்தர அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

இவரது நியமனம், கல்லூரியின் கல்வி தரத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1971 ஜனவரி, 05ஆம் திகதியிலிருந்து மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று (2026) 55 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியானது முஸ்லிம் பெண்கள் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0