மாமனிதர் தராகி சிவராமிற்கு மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு!!
சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றம் சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா துரைரெட்னம் ஆகிய இருவரும் இணைந்து தராகி சிவராம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரினால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.