உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னார் டச்சுக் கோட்டையின் நிலை குறித்து சுற்றுலா அதிகாரசபை தலைவர் நேரடி விஜயம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் (Mannar Dutch Fort) தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்று 28 ஆம் திகதி நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சிதைவடைந்து வருவதையும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கோட்டையின் தொன்மையை சிதைக்காமல் பாதுகாப்பதுடன், நவீன சுற்றுலாத் தரத்திற்கு ஏற்ப அதை எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இவ்வாறான வரலாற்றுத் தலங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கள விஜயத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டதுடன், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர திருத்தப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதே நேரம் 108 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் குறித்த செயல் திட்டத்தை விரைவில்  நிறைவுறுத்துமாறும் ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0