உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’மலையகத் தமிழருக்கு வேண்டும்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனுக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பின் போது முன்வைக்கப்படவுள்ள முக்கிய கோரிக்கைகள் குறித்து கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. விளக்கியுள்ளார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களில் எவரேனும் விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு ‘கடல் கடந்த இந்தியக்  குடியுரிமை’ அந்தஸ்து வழங்குவதை இலகுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய உப ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளையின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி, மலையகக் கல்வி வளர்ச்சிக்கு முழுமையான உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

குறிப்பாக,

*புதிய பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை நிறுவுதல்.
* இந்தியாவின் ‘நவோதயா’ பாடசாலை திட்டத்தின் அடிப்படையில் ஆங்கில மொழி மூல சர்வதேச இந்து பாடசாலையை அமைத்தல்.
* தாதியர் மற்றும் தொழில்-நுட்ப பயிற்சி கலாசாலைகளை உருவாக்குதல்.
* பாடசாலைகளுக்கான பௌதிக வளங்கள் மற்றும் புலமைப்பரிசில் திட்டங்களை அதிகரித்தல்.

மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், இந்தியா வழங்கும் உதவித் தொகைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.

“இந்த முன்மொழிவுகளை ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் ஆகியோரிடமும் முன்வைத்துள்ளோம். மீண்டும் அதனை இந்திய உப ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்” என்று மனோ கணேசன் எம்.பி. குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கூட்டணியின் தலைவருடன் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை – இந்திய வம்சாவளி மக்களின் பன்முக வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0