உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சித்தாண்டி பகுதியில் தாய் ஒருவர் மகனால் தாக்கி கொ*லை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டி பகுதியில் தாய் ஒருவர் மகனால் தாக்கி கொ*லைசெய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது.

சித்தாண்டி-04 கிராமசேவகர், பழைய சந்தை வீதி, வேலாயுதம் வீதியில் வசிக்கும் குமாராசாமி வசந்தா (வயது 39) என்பவரரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு குடும்ப அங்கத்தவரைக் கொண்ட வீட்டில் கொலை செய்யப்பட்டவரின் தாய் 23 மற்றும் 22 வயதுடைய மகன்கள். குறித்த வீட்டில் குடி போதையினால் தாய் மகன்களிடையே தொடர்ச்சியாக வீட்டில் சண்டை இடம்பெறுவதாக அயலவர்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

மன உளச்சலுக்கு ஆளான இளைய மகன் குகேந்திரன் (வயது 22) என்பவர் இரண்டு கிழமைக்கு முன்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் வீட்டில் மூத்த மகன் (வயது 23) ரகேந்திரன் என்பவருடன் தாய் இருந்துள்ளார். இவர் குடிப்பதற்காக தொடர்ச்சியாக தாயிடம் பணம் கேட்டு சண்டை பிடித்துள்ளார்.

நேற்றைய தினமும் குடிப்பதற்கு பணம் கேட்ட நிலையில் தனது தாயை அடித்து கொலை செய்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற சற்று நேரத்தில் கொ*லை செய்யப்பட்ட மகளின் தாய் வீட்டிக்கு வந்த வேளை கொ*லை செய்த மகன் வீதியால் கத்திக்கொண்டு சென்றதை கண்டுள்ளார். பின்னர் அயலவரிடம் கேட்டபோது தனது தாய் அடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வீட்டை திறந்து பார்க்கும்போது இறந்த நிலையில் மகள் கிடந்ததை கண்டுள்ளார்.

பின்னர் சந்திவெளி பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு தடயவியல் பொலிசார், ஏறாவூர் சுற்றுல நீதிமன்ற நீதவான் உள்ளிட்டவர்கள் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் அயலவர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

இதன் பின்னர் சடலம் மேலதிக சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த கொ*லையை மேற்கொண்ட தாயின் மூத்த மகன் நேற்றிரவே சந்திவெளி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0