மதுபானம் அருந்த பணம் வழங்க மறுத்த தாயைக் கொ*லை செய்த மகன்.!
மதுபானம் அருந்த ஆயிரம் ரூபாய் வழங்காத தாயை 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில் அவர் தரையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு – சித்தாண்டியில் நேற்று ( 17) மாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை 6.00 மணியளவில் 19 வயதுடைய மகன் தனது தாயாரிடம் மதுபானம் அருந்துவதற்கு ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் தாயார் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்த போது கோபமடைந்த மகன் தாயாரை பிடித்து தள்ளியதையடுத்து அவர் தரையில் வீழ்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை நடாத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.