உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கொட்டகலை கொமர்சல் பகுதியில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கும் இடையில் நேற்று (13) மாலை சுமார் 2.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கையில்,
தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி கடுமையாக காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் சென்ற மேலும் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், மேபீல்ட் பகுதியில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த சிறிய ரக தனியார் பேருந்து ஒன்று, கொட்டகலை இருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேருந்தின் தடை (பிரேக்) இயங்காமையே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

19 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

67 0 0