வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்.!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ், சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட வழிபாடுகளும், பூஜைகளும் பூசகர் மதிமுக ராசா அவர்களினால் இடம்பெற்றுள்ளது.
பெருந்திரளான பொதுமக்கள் வழிபாட்டில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.






