உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் உயிர்மாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 32 வயதுடைய செல்வராசா மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, சகோதரன் தனது கிராம சேவையாளரான சகோதரியை கத்தியால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சகோதரி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாக்குதலை மேற்கொண்ட சகோதரர் பயத்தின் காரணமாக யாரும் இல்லாத நேரத்தில் குமுழமுனையில் உள்ள தனது வீட்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்களாக காணாமல்போன அவரை உறவினர்கள் தேடிய நிலையில், நேற்றையதினம் (12) வீட்டுக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0