உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

எமது மக்களை வாழவைக்க முடியாவிட்டால் ஆட்சி எதற்கு?

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நாட்டில் அதிகரித்துள்ள கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்றும், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகளால் மக்கள் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள விகாரைகளுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இன்று மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். மக்களின் இந்த அவல நிலைக்கு அரசு எப்போது தீர்வை வழங்கப்போகின்றது?

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகள் நடக்கவில்லை என அரசு முதலில் கூறியது. பின்னர் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. கணக்காய்வாளர் அறிக்கையின் மூலம் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த மோசடிகளால் ஏற்பட்டுள்ள நட்டத்தை அரசு மறைமுகமாக மக்கள் மீதே சுமத்தி வருகின்றது.

தரமற்ற நிலக்கரியால் போதிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாதுள்ளது. இதனால் டீசல் மின் நிலையங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற வேண்டியுள்ளது. நிலக்கரியை விட டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக செலவாகும். இந்த மேலதிகச் செலவு இறுதியில் மின்சாரப் பாவனையாளர்கள் மீதே சுமத்தப்படுகின்றது. 75 இலட்சம் மின் பாவனையா*’ளர்கள் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகளை உடனடியாகக் குறைத்து, மக்கள் வாழக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். மக்களை வாழ வைப்பதே ஓர் அரசின் பிரதான பொறுப்பாகும்.

மக்களைக் காக்கும் பொருட்டு அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

58 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

92 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

45 0 0