உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

கொழும்பில் சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் சென்ற 07 பேருந்துகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

கொழும்பு Peoples Park பகுதியிலிருந்து நேற்று இரவு ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை அதிகாரிகள் மற்றும் பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலைய அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 07 பேருந்துகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்துகள் பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலித்துள்ளதோடு, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஷெரின் அத்துகோரல மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்துப் பயணிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் மத்திய பேருந்து நிலையம், பெஸ்டியன் மாவத்தை முனையம் உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் உங்களுக்காக சட்டப்பூர்வமான போக்குவரத்து வசதிகளை நாம் தயார் செய்துள்ளோம்.

இவ்வாறான சட்டவிரோத சேவைகளைப் பயன்படுத்துவது உங்கள் உயிருக்கு ஆபத்தையும் பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தும்.

நேற்று நாம் முன்னெடுத்த சோதனையில் இவ்வாறான 07 பேருந்துகளைக் கைப்பற்றி பொலிஸாரின் உதவியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0