உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பாரவூர்தி கவிழ்ந்து விபத்து; இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து பாரவூர்தி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.00 மணி முதல் 2.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கட்டுப்பொத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த பாரவூர்தி ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுப்பொத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0