உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பொலிஸார் மீது தாக்குதல்; இரண்டு அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அம்பாந்தோட்டை, சூரியவெவ, கோன்கெட்டியார பகுதியில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்றைச் சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோன்கெட்டியார பகுதியில் சூதாட்ட விடுதி ஒன்று இயங்கி வருவதாக சூரியவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சுற்றிவளைப்பை மேற்கொண்டது.

இதன்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் ஒன்று, சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இரு அதிகாரிகளைத் தாக்கி அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைக்காக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கடமையைச் செய்யவிடாது தடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் சூரியவெவ, வெலிஆர மற்றும் தர்மிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0