சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படும் கோடாவுடன் ஒருவர் கைது.!
பமுணுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகபே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (11) மாலை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 58 வயதுடைய வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சுமார் 2,646 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பமுணுகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுணுகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.