உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முச்சக்கரவண்டி – பாரவூர்தி மோதி விபத்து; முதியவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

குருநாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதானகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் மேலும் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாவத்தகம, உதானகம பகுதியில் இருந்து மீகொல்ல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிரே வந்த பாரவூர்தியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் கோரத்தால் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த ஓர் ஆணும், இரு பெண்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஆண் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மற்றைய இரு பெண்களுக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விபத்து தொடர்பாக பாரவூர்தி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதிகள் இருவரும் மாவத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற விதம் குறித்து மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0