உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உந்துருளி மோதி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கொழும்பு, பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுலாவ – குருவல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பாதுக்க, மதுலாவ சந்தியிலிருந்து லியன்வல சந்தி நோக்கி அதிவேகமாகப் பயணித்த உந்துருளி ஒன்று, குருவல பகுதியில் வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த பாதசாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் பாதசாரியும், உந்துருளியைச் செலுத்திய நபரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் பாதுக்க பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த உந்துருளி ஓட்டுநருக்குத் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பாதுக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0