உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மோட்டார் சைக்கிள் பாலத்துடன் மோதி ஒருவர் பரிதாப உயிரிழப்பு! – ஹொரணையில் சோகம்

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

கொழும்பு – ஹொரண வீதியின் பொகுணுவிட்ட சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று ஹொரண நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், அதன் பின்னால் அமர்ந்து பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், பின்னால் அமர்ந்து பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர் கிரிஎல்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

15 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0