உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

படங்கள் இணைப்பு – ஹோமாகம தனியார் பல்கலை மாணவன் உயிரிழப்பு: கழிவறையில் ஏற்பட்ட தர்க்கமே மோதலுக்குக் காரணம் – திருப்பம் தரும் சி.சி.ரி.வி. காட்சிகள்

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிரிப்பிட்டிய, நிக்கடலுபோத்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யசித் சத்துக்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அந்த விருந்தகத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது அங்குள்ள கழிவறைக்குச் சென்ற மாணவிகள் சிலரைத் தொடர்ந்து மற்றொரு மாணவியும் சென்றுள்ளார். அவர்கள் திரும்பி வருவதற்குத் தாமதமானதால், ஏனைய மாணவர்கள் அங்கு சென்றபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டீ.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த மாணவன் அங்குள்ள நீச்சல் குளத்துக்கு அருகே திடீரெனக் கீழே விழுவது பதிவாகியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில் தாக்குதலே மரணத்துக்குக் காரணம் எனக் கருதப்பட்டாலும், அவரது உடலில் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகளுக்காகச் சடலம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த மற்றுமொரு மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது எதிர்பாராத மரணமா என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

5 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0