உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

போதைப்பொருள் வேட்டையில் ஒரே நாளில் ஆயிரம் பேர் கைது!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் ஆயிரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 1,006 சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 480 கிராம் ஹெரோயின், 772 கிராம் ஐஸ், 10 கிலோகிராம் 515 கிராம் கஞ்சா, 1,507 கஞ்சா செடிகள், 65 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 373 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 819 போதை மாத்திரைகள், 65 கிராம் மதனமோதகம் மற்றும் 2 கிலோகிராம் 447 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் இந்தத் தேசிய திட்டம் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0