உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் தடையின்றி பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக, இன்று ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ குறியீட்டு முறையைப் பின்பற்றப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா இந்தத் தகவலை வெளியிட்டார்.

எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தளர்த்தப்பட்ட போதிலும், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை எண் மற்றும் இரட்டை எண் (Odd/Even) அடிப்படையில் எரிபொருள் வழங்கும் முறை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும்.

பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டுமே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதிக்குப் பின்னர் வழமை போன்று ‘QR’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0