உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக கபீர் ஹாசிம் நியமனம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சிரேஷ்ட உறுப்பினருக்கான புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கபீர் ஹாசிமுக்கான புதிய தவிசாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் உடனிருந்தார்.

கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான கபீர் ஹாசிம், ஏற்கனவே பல அமைச்சுப் பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர் என்பதுடன், தற்போது நாடாளுமன்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில், கட்சியின் தவிசாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0