உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்னார் இலுப்பைக்கடவை மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் சிறப்பு புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக வணிகத் துறையில் இலுப்பைக்கடவை மகா வித்தியாலயத்தின் மாணவன் டி. டிதுர்சன் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றிருந்தார்.

அத்துடன் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவன் த. லினுசன் கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 12 நிலையையும் பெற்றிருந்தார். எனவே அம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. அந்தோணி வாஸ் ஜூட் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விழாவின் பிரதம விருந்தினர்களாக மடு கல்வி வலயத்தின் பணிப்பாளர் Ac.வலரென் மற்றும் ஸ்தாபனம் மற்றும் முகாமைத்துவத்தின் வலய பிரதிநிதி – ஜூட் இந்திரகுமார் அவர்களும், தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் எஸ் ஜெகன், வலயக் கல்வி ஆசிரிய ஆலோசகர் ஸ்டான்லின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் குறித்த நிகழ்வில் மாணவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0